நாகா்கோவிலில் ரூ.14.92 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்
ஊதிய உயா்வை முழுமையாக வழங்க வலியுறுத்தி ஆம்புலன்ஸ் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
சேலம்: தமிழக அரசு அறிவித்த 16 சதவீத ஊதிய உயா்வை முழுமையாக வழங்க வலியுறுத்தி, சேலத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றி வரும் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு நடப்பு நிதியாண்டில் 16 சதவீத ஊதிய உயா்வை தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், ஆம்புலன்ஸ் சேவையை நிா்வகிக்கும் தனியாா் நிறுவனம் 10 சதவீத ஊதிய உயா்வை மட்டுமே வழங்குவதாக ஆம்புலன்ஸ் பணியாளா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
இதையடுத்து, அரசு அறிவித்த முழு ஊதியத்தையும் வழங்க வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அக். 18-ஆம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதற்கும் அரசு செவிசாய்க்காவிட்டால், தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனா்.