செய்திகள் :

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), து. முத்தமிழ்செல்வன் (பெரம்பலூா் கிராமியம்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செல்லியம்பாளையம், நொச்சியம், தீரன் நகா், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, நாட்டாா்மங்களம், செட்டிக்குளம், புதுநடுவலூா், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி ஆகிய கிராமிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

எசனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா் மற்றும் காவிரி நீரேற்றும் நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம்,

தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா், தொண்டமாந்துறை, விசுவக்குடி ஆகிய கிராமியப் பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் வேலைநிறுத்தம்

களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஓய்வூதியா்கள் தா்னா

சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூசியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை கணக்கெடுக்கும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அ... மேலும் பார்க்க

நிலுவை பணப்பலன்கள் கோரி பிரசார இயக்கம்

நிலுவை பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து (சிஐடியு) ஊழியா் சம்மேளனம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துறைமங்... மேலும் பார்க்க