செய்திகள் :

எம்.எல்.ஏ-வுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள ஜக்தீப் தன்கர்; விவரம் என்ன?

post image

துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர், அவரின் பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும் நிலையில் திடீரென கடந்த ஜூலை 21 அன்று பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவிற்கு அவரின் உடல் நிலையை காரணமாக சொல்லப்பட்டது.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் பலரும், ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும்  எதிர்க்கட்சிகள் அவர்  எங்கே உள்ளார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஜக்தீப் தன்கர்
ஜக்தீப் தன்கர்

இந்நிலையில் ஜக்தீப் தன்கர் ராஜஸ்தான் சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினருக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவைச் செயலாளரகம் அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் கிஷன்கர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 1993 முதல் 1998 வரை இருந்தவர் ஜக்தீப் தன்கர். 2019 ஜூலை மாதம் வரை அவர் சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தைப் பெற்றுவந்தார். அவர் மேற்கு வங்காள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு அந்த ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி துணைத் தலைவராக இருந்த பதவியிலிருந்து விலகியதையடுத்து, தன்கர் தற்போது தனது ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குமாறு ராஜஸ்தான் சட்டப்பேரவைச் செயலாளரகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, அவரது ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும், துணைத் தலைவராக இருந்த பதவியிலிருந்து விலகிய தேதி முதல் அவருக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜக்தீப் தன்கர்

தன்கருக்கு ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா?

ராஜஸ்தானில், ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருக்கு மாதம் ரூ.35,000 அடிப்படை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதவீத கூடுதலாக வழங்கப்படும். அதன்படி தற்போது 74 வயதில் உள்ள தன்கர், மாதம் ரூ.42,000 ஓய்வூதியத்துக்கு தகுதி பெறுவார்.

இதுதவிர ஒருமுறை லோக்சபா எம்.பி. ஆக இருந்ததற்காக மாதம் ரூ.45,000 பெறுவதற்கு அவர் உரிமை பெற்றுள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் என்ற முறையில், அவர் மாதம் சுமார் ரூ.2 லட்சம் பெறுவதோடு, அதிகாரப்பூர்வ இல்லம், ஊழியர்கள், மற்றும் மருத்துவ வசதிகளையும் பெற முடியும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும்"-தயாரிப்பாளர்கள் சங்கம்

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக த... மேலும் பார்க்க

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு: "முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்" - சபாநாயகர் அப்பாவு

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், 'அவ்... மேலும் பார்க்க

சென்னை: வடிகால் தொட்டியில் விழுந்த பெண்; சடலமாக மீட்ட காவல்துறை - என்ன நடந்தது?

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, வீரபத்திரன் கோயில் தெருவில் உள்ள ஒரு வண்டல் சேகரிப்பு தொட்டியில் (silt catch pit) பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாந... மேலும் பார்க்க

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க