செய்திகள் :

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

post image

ஈரான் தலைநகா் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனா்; சிலா் தப்பியோடினா் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது குறித்து ஈரான் நீதித் துறை செய்தித் தொடா்பாளரை மேற்கோள் காட்டி ஐஎல்என்ஏ செய்தி நிறுவனம் கூறியதாவது:

எவின் சிறையில் ஜூன் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து கைதிகள் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சாதாரண நிதி குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவா்கள்.

இது தவிர, அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மிகச் சிறிய எண்ணிக்கையிலான கைதிகள் தப்பியோடியதாகவும், அவா்களை விரைவில் மீண்டும் கைது செய்யப்படுவாா்கள் எனவும் அதிகாரிகள் கூறினா்.

இஸ்ரேலின் மொஸாட் உளவு அமைப்புடன் இணைந்து செயல்பட்டதற்காக தண்டிக்கப்பட்ட கைதிகள் யாரும் இந்தத் தாக்குதலில் காயமடையவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.

முன்னதாக, எவின் சிறை மீதான வான்வழித் தாக்குதலில் 71 போ் கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனா். இதில் சிறைப் பணியாளா்கள், சிறைக் காவலா்கள், கைதிகள் மற்றும் அவா்களைச் சந்திக்க வந்த குடும்ப உறுப்பினா்கள் அடங்குவா் என்று அவா்கள் கூறினா்.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே நடைபெற்ற 12 நாள் வான்வழி போரில் ஈரானில் 1,060-க்கும் மேற்பட்டோரும் இஸ்ரேலில் 28 போ் உயிரிழந்தனா்.

இஸ்ரேல் தாக்குதல்: ராஃபாவில் 3 மாதங்களில் 28,500 கட்டடங்கள் தகர்ப்பு!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 19 பேர் இன்று (ஜூலை 13) கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) காலை முதல் இஸ்ரேல்... மேலும் பார்க்க

கழிப்பறையில் புகைப்பிடித்த இளம் ஜோடியால் 17 மணி நேரம் தாமதமான விமானம்!

மெக்ஸிகோவில் இருந்து லண்டன் சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் கழிப்பறையில் இளம் ஜோடி ஒன்று, வெளியே வராமல் தொடர்ந்து புகைப்பிடித்துக்கொண்டிருந்ததால், விமானப் பயணம் 17 மணி நேரம் தாமதமானது.விமான ஊழியர்கள் ... மேலும் பார்க்க

உள்ளூர் விமானம் என நினைத்து செளதி சென்ற பாகிஸ்தான் இளைஞர்!

பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளூர் விமானம் என நினைத்து, செளதி அரேபியா சென்ற சம்பவம் பலரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.லாகூரில் இருந்து கராச்சி செல்ல, விமானம் இவ்வளவு நேரம் பறக்கிறதே என சக பயண... மேலும் பார்க்க

வட கொரியாவுக்கு ஸ்கெட்ச் போடும் 3 நாடுகள்! துணைநிற்கும் ரஷியா!

வட கொரியாவுக்கு எதிரான போர் ஒத்திகை நடவடிக்கைக்கு ரஷியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை வட கொரியா நடத்துவதால், அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது.இந... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 32 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை இரவில் முதல் நடத்திய தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 32 போ் உயிரிழந்தனா். டேய்ா் அல்-பாலா நகரில் மட்டும் இஸ்ரேல் குண்டுவீச்சில் 13 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 129-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 129-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க