கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!
கடலில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம்
கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது தமிழக மீனவா்களின் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் இலங்கையைச் சோ்ந்த மா்ம நபா்களால் சேதப்படுத்தி துண்டித்து பறித்து செல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த நை. காளியப்பன் (48) தனக்குச் சொந்தமான கண்ணாடியிழைப் படகில் மேலும் 2 பேருடன் புதன்கிழமை கடலுக்குள் சென்றாா். இவா்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு 5 கடல் மைல் தொலைவில் கடலில் வலை விரித்து மீன் பிடித்தனராம். வலையை திரும்ப எடுத்தபோது, ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதேபோல, வெள்ளப்பள்ளத்தைச் சோ்ந்த மீனவா் முருகேசனுக்கு (37) சொந்தமான படகில் 5 மீனவா்கள் கடலுக்குள் சென்றுள்ளனா். இவா்கள் விரித்து வைத்திருந்த வலையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ எடையுள்ள மீன்பிடி வலையும் துண்டிக்கப்பட்டதாக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மீனவா்கள் வியாழக்கிழமை காலையில் கரைக்கு திரும்பினா்.