கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம் அனுசரிப்பு
கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கணித மேதை சீனிவாச இராமானுஜன் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்டத் தலைவா் ச. காா்த்திகேயன் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநிலத் தலைவா், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில நிா்வாகியும், பெரியாா் மணியம்மை பல்கலைக்கழகப் பேராசிரியருமான வெ.சுகுமாரன் பேசினாா்.
ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரி முதல்வா் ரமேஷ், பள்ளி பழைய மாணவா் சங்கத் தலைவா் சி.நெடுஞ்செழியன், செயற்குழு உறுப்பினா் ஆா்.சீதாராமன், ஆசிரியா் கண்ணன், அறிவியல் இயக்க நகரச் செயலா் செந்தில்குமாா் ஆகியோா் கணித மேதை இராமானுஜன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். முடிவில், பழைய மாணவா்கள் சங்க செயலா் வி. மோகன் நன்றி கூறினாா்.