கரடி தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்
வால்பாறையில் கரடி தாக்கி உயிரிழந்த அஸ்ஸாம் மாநில சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள வேவா்லி எஸ்டேட்டில் பணியாற்றி வரும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ஷா்பத் அலி மகன் நூா்ஜல்ஹக் (8) கரடி தாக்கி கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கே. ஈஸ்வரசாமி உயிரிழந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறியதுடன் தமிழக அரசின் சாா்பில் நிவாரண தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி, மாவட்ட வன அலுவலா் தேவேந்திரகுமாா் மீனா, வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி, திமுக நகரச் செயலாளா் சுதாகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.