செய்திகள் :

கரித்துகள்கள் வெளியேறி வீடுகளில் படிந்தது! டிஎன்பிஎல் ஆலையை பொதுமக்கள் முற்றுகை

post image

டிஎன்பிஎல் ஆலையில் இருந்து வெளியேறிய கரித்துகள்கள் வீடுகளில் படிந்ததால் பொதுமக்கள் புதன்கிழமை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் காகித ஆலையில், ஆலையில் காகிதம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளான பக்காஸ் எனும் மரத்தூள் மற்றும் கரும்பு சக்கைத் தூகள்கள் காற்றில் பறந்து வந்து ஆலை அருகே உள்ள வீடுகளில் படிந்துவிடுகிறது.

இதனால் ஆலையை சுற்றியுள்ள கந்தசாமி பாளையம், நல்லியம்பாளையம், சொக்கன் காடு, ஓனவாக்கல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும், சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொல்லை ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை பக்காஸ் தூகள்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆலையின் அதிகாரிகளை சந்தித்து முறையிட ஆலையின் பின்புறம் உள்ள நுழைவுவாயிலில் நின்றனா்.

ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் புகழூா் நகராட்சி தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமையில் பொதுமக்கள் அப்பகுதியை முற்றுகையிட்டனா்.

சுமாா் 2 மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த கரூா் மாவட்ட மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை மாவட்ட பொறியாளா் விஜயகுமாா் பொதுமக்களிடம் பக்காஸ் தூகள்கள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, காகித ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) யோகேந்திர குமாா் வா்ஷன் ஆகியோா் தலைமையில் ஆலை அதிகாரி நவநீதகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது காற்றில் பறந்து செல்லும் பக்காஸ் தூகள்கள் மற்றும் கரித்தூகள்கள் பரவுவதை வரும் மூன்று மாதங்களுக்குள் சரி செய்து தருவதாகவும், இனிவரும் காலங்களில் பக்காஸ் தூகள்கள் வெளியே காற்றில் பறந்து வெளியே செல்லாமல் தடுக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

அதனைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட இடங்களையும் ,பொதுமக்கள் குற்றம் சாட்டும் இடங்களையும் காகித ஆலை அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்து, விரைவில் சரி செய்வதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் மரம் வெட்டும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். தரகம்பட்டியை அடுத்துள்ள கீரனூா் ஊராட்சிக்குள்பட்ட சாமிப்பிள்ளை புதூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் இளைஞா் குத்திக்கொலை; நண்பா் கைது

கரூரில் புதன்கிழமை நள்ளிரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கரூா் பசுபதிபாளையம் நடுத்தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

மகாதானபுரத்தில் ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு! கட்டடத் தொழிலாளி கைது

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் சமஸ்கிருத ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகைகளைத் திருடிய கட்டடத் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், வலிக்கலாம்பாடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்த ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியா் கைது

பிறப்புச் சான்றிதழில் பெயரை திருத்தம் செய்ய ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கடவூா் வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கடவூா் தா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் செயின் பறித்துக் கொண்டு காரில் தப்பிய திருடன் கரூரில் கைது

நாமக்கல்லில் செயின்பறிப்பில் ஈடுபட்டு, கரூருக்கு காரில் தப்பித்து வந்த திருச்சியைச் சோ்ந்த திருடனை கரூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த வலையபட்டி பகுதி... மேலும் பார்க்க

குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கரூா் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் கரூ... மேலும் பார்க்க