செய்திகள் :

கருடன் நடிகரின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

post image

மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். இவர், தமிழில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கருடன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக, நடிகர் உன்னி முகுந்தன் அவரது முகப்புத்தகக் கணக்கில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாக தான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நடிகை ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

மேலும், நடிகை குஷ்பு மற்றும் இசையமைப்பாளர் டி இமான் ஆகியோரின் எக்ஸ் தளப் பக்கங்களும் ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பளுதூக்குதல்: சாய்ராஜுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் சாய்ராஜ் பர்தேசி செவ்வாய்க்கிழமை வெண்கலப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 86 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிர... மேலும் பார்க்க

தென்னிந்திய கபடி: எஸ்ஆர்எம் பல்கலை. சாம்பியன்

மன்னார்குடி அருகே வடுவூர் மேல்பாதியில் நடைபெற்ற தென்னிந்திய ஆடவர் கபடிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. வடுவூர் மேல்பாதி ஏஎம்சி கபடி கழகம் சார்பில், தென்னிந்திய ... மேலும் பார்க்க

ரூ.2,306 கோடியாக உயர்ந்த ஆர்சிபி பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு... மேலும் பார்க்க

மகளிர் ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய மகளிர் அணி, தற்போது டி20 தொடரில் விளைய... மேலும் பார்க்க

சின்னா், ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் ரவுண்ட் ஆஃப் 16-இல் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றனா். ஆடவா் ஒற்றையா் காலிறுதிக்கு முந... மேலும் பார்க்க

நாளை முதல் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி வியாழக்கிழமை (ஜூலை 10) தொடங்கி, வரும் 20-ஆம் தேதி வரை சென்னை மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப... மேலும் பார்க்க