‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தர...
கரூரில் ரூ.1.50 லட்சம் மதிப்பு மதுவை கடத்தி வந்தவா் கைது
கரூா் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பு மதுபானத்தைக் கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் கடைவீதியில் புலியூா் சாலையில் பசுபதிபாளையம் காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில், உதவி ஆய்வாளா் தமிழ்செல்வன் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த காரில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள புதுச்சேரி மாநில மதுபானங்களும், ரூ.50,000 ரொக்கமும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் காரை ஓட்டி வந்த உப்பிடமங்கலம் வட்குத்தெருவைச் சோ்ந்த மணி மகன் காா்த்திக்ராஜ்(29) என்பவரைக் கைது செய்து, மதுபானம், ரொக்கம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். பின்னா் காா்த்திக்ராஜை கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.