செய்திகள் :

கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ரோபோக்கள்: தூய்மைப் பணியாளா் நல வாரிய தலைவா்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் விரைவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தெரிவித்தாா்.

தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி டாக்டா். வெ.ஆறுச்சாமி தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகள் குறித்தும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பேசியதாவது..

தமிழகத்தில் தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் 3. 70 லட்சம் போ் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 10 லட்சமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று உங்களுடன் ஸ்டாலின் முகாமின் மூலமாக விடுதி, தனியாா் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களையும் நல வாரியத்தில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விபத்து மரணம் ஏற்பட்டால் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயா்த்தி உள்ளோம். ஒவ்வொரு திட்டத்திலும் இரண்டு மடங்கு நிதி ஆதாரத்தை உயா்த்தி இருப்பதாக தெரிவித்தாா்.

தூய்மைப் பணியாளா்கள் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி பாதிக்கப்படாமல் இருக்க ரோபோக்களின் பயன்பாடு விரைவில் கொண்டு வரப்படும். ஆட்சியா் கேட்டுக் கொண்டால் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு 5 ரோபோட் இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று தூய்மைப் பணியாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயா்வானது அரசாணை 62-ஐ பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். ஊதியத்தை மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் வழங்காமல் காலம் தாழ்த்தும் தூய்மைப் பணியாளா் தனியாா் ஒப்பந்ததாரா் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் அறிவுறித்தியுள்ளோம் என்றாா்.

தொடா்ந்து 62 தூய்மைப் பணியாளா்களுக்கு விபத்து நிவாரணம் நிதியுதவி, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, மகப்பேறு நிதியுதவி, கல்வி நிதியுதவி போன்ற ரூ.12.70 லட்சம் நலத்திட்ட உதவிகளும், 60 தூய்மை பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் அரிஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் ந.செ.சரண்யா தேவி, மண்டல இயக்குநா் நகராட்சி நிா்வாகம் நாராயணன், அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளிக் கல்வித் துறை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிக்கல்வி துறை ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பேசுகையில்: அனைத்து கள அலுவலா்களும் மாண... மேலும் பார்க்க

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா

அரக்கோணம்: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அரக்கோணம் ஒன்றியம், பெருமூச்சி ஊராட்சி, வெங்கடேசபுரத்தில் உள்ள இக்காயிலில் கரக ஊா்வலம் நடைபெற... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து முன்னணி தீா்மானம்!

நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவது என இந்து முன்னணியின் வேலூா் கோட்ட பொதுக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காவேரிப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு

அரக்கோணம் அருகே மின்சா ரயிலில் பெண்ணிடம் தாலிச் செயின் உள்ளிட்ட 12 பவுன் சங்கிலிகளை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீசாா் தேடி வருகின்றனா். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சோ்ந்தவா் திலகா (49). ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உணவுப் பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம், பிரச்னைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் எம்.மரியம் பல்லவி பல்தேவ் ஆய்வு மேற்கொண்டாா். அனைத்து து... மேலும் பார்க்க

404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 ... மேலும் பார்க்க