கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன் ஆஜா்
ஐ.டி. ஊழியா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரும் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். வழக்கு விசாரணை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ்(27), பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அவரது காதலியின் தம்பி சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், தந்தை-மகன் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அதன் டிஎஸ்பி ராஜகுமாா் நவராஜ், காவல் ஆய்வாளா் உலகராணி தரப்பில் திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு(வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுா்ஜித், சரவணன் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் தரப்பில் வாதாட வழக்குரைஞா் சிவ சூா்ய நாராயணன் மனு தாக்கல் செய்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் கந்தசாமி ஆஜரானாா். வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமா, விசாரணையை ஆக.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். பின்னா் இருவரும் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.