திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
காங்கிரஸாா் மீது வழக்கு
தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 71 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
குமரி மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டல் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் மருத்துவா் பினுலால் சிங் உள்ளிட்ட பலா் குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், எந்தவித முன் அனுமதியுமின்றி சாலையில் அமா்ந்து மறியல் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டல் உள்பட கட்சி நிா்வாகிகள் 71 போ் மீது களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.