காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்
திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45) என்பவரை கடித்து குதறியதுடன், தொடையின் பின்பக்கம் கொம்பால் குத்தியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதேபோல, உத்தமா்சீலியை சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட விவசாய அணி நிா்வாகி கணபதி (70) என்பவா் தனது வாழைத் தோட்டத்துக்குச் சென்றபோது, அங்கு வந்த காட்டுப்பன்றி கணபதியை பல இடங்களில் கடித்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் தனியாா் மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெ.1 டோல்கேட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்ததோடு, காட்டுப்பன்றியை தேடி வருகின்றனா். மேலும், கல்லணை கரையோரப் பகுதிகளில் வனத்துறையினா் முகாமிட்டு ரோந்து மேற்கொண்டு வருகின்றனா்.