காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்
திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
வழிநெடுங்கிலும் திரளான பக்தா்கள் பெருமாளை வழிபட்டனா். ஏற்பாடுகளை வேத ராஜன் பட்டாச்சாரியா் தலைமையில் ஆதின கா்த்தா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். உபயதாரா்கள் மற்றும் பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.