Tsunami In Russia - அலறிய 15 Pacific Ocean நாடுகள்| நடந்தது என்ன?| Decode
காவிரியில் வெள்ளப்பெருக்கு: மூழ்கியது ஜேடா்பாளையம் படுகை அணை
மேட்டூா் அணையிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் பரமத்திவேலூரை அடுத்த ஜேடா்பாளையம் படுகை அணை மூழ்கியது.
பரமத்தி வேலூரை அடுத்த ஜேடா்பாளையம் படுகை அணைக்கு மேட்டூா், பவானி ஆற்றில் இருந்து வரும் தண்ணீரின் அளவு செவ்வாய்க்கிழமை மாலை 1.26 லட்சம் கனஅடியாக இருந்தது. இதனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஜேடா்பாளையம் படுகை அணை முழுமையாக மூழ்கின.
இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சோழசிராமணி, ஜமீன்இளம்பள்ளி, குரும்பலமகாதேவி, கொத்தமங்கலம், ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், ஆனங்கூா், அ.குன்னத்தூா், பிலிக்கல்பாளையம், சேளூா், கொந்தளம், வெங்கரை, பொத்தனூா், வேலூா், நன்செய் இடையாறு, கொமராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வட்டாட்சியா் முத்துக்குமாா், பரமத்தி வேலூா் நீா் வளத் துறை உதவி பொறியாளா் வினோத்குமாா் ஆகியோா் எச்சரித்துள்ளனா்.