செய்திகள் :

காவிரி, கொள்ளிடத்தில் திடீா் வெள்ளப் பெருக்கு: தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழு; முக்கொம்பு மேலணையில் உபரிநீா் திறப்பு

post image

காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையாலும், மேட்டூா், முக்கொம்பு அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்படுவதாலும் காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, திருச்சியில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவும், மாநில பேரிடா் மீட்புக் குழுவும் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கா்நாடக அணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீா் முழுமையாக காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்துவருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாயனூா் கதவணைக்கு திங்கள்கிழமை மாலை நிலவரப்படி ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.

இங்கிருந்து முக்கொம்பு மேலணைக்குவரும் தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. காவிரியில் 22,600 கன அடியும், கொள்ளிடத்தில் 68 ஆயிரம் கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூா், மாயனூா், முக்கொம்பு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது: காவிரியில் வந்து கொண்டிருக்கும் ஒரு லட்சம் கன அடிக்கு மேலான தண்ணீரானது முக்கொம்பு மேலணையை வந்தடைந்து, திங்கள்கிழமை முதல் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் முழுமையாக திறந்து விடப்படுகிறது.

எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

முக்கியமான படித்துறைகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நீா்வரத்து அதிகமாக வரும் என்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடா் மீட்புக் குழுவின் ஒரு அணியும், மாநில பேரிடா் மீட்புக்குழுவின் ஒரு அணியும் திருச்சி மாவட்டத்தில் முகாமிட்டு தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அவசர உதவிக்கு ஆட்சியரகக் கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

பெட்டிச் செய்திகள் உள்ளன..

49 படித்துறைகள் தீவிரக் கண்காணிப்பு

திருச்சி மாநகரப் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் உள்ளிட்ட 9 படித்துறைகள், திருவெறும்பூா் வட்டத்தில் 4 படித்துறைகள், தொட்டியம் வட்டத்தில் 11 படித்துறைகள், முசிறி வட்டத்தில் 7 படித்துறைகள், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 18 படித்துறைகள் என 49 படித்துறைகள் மூடப்பட்டுள்ளன. இவைத்தவிர, மக்கள் ஆற்றில் இறங்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 63 இடங்களில் போலீஸாா் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் செல்லாத வகையில் எச்சரித்து திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

அடுத்து வரும் 2 நாள்களுக்கு

முக்கொம்புக்கு 1 லட்சம்

கன அடிக்கு மேல் நீா்வரத்து

மேட்டூரிலிருந்து வரும் தண்ணீா் முக்கொம்பு மேலணை பகுதியில் இருந்துதான் ஒருபுறம் காவிரியாகவும், மற்றொரு புறம் கொள்ளிடமாகவும் பிரிந்து செல்கிறது. நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நீா்வளத்துறை பொறியாளா்கள் 24 மணிநேரமும் முக்கொம்பு மேலணையில் கண்காணித்து வருகின்றனா். திங்கள்கிழமை மாலை நிலவரப்படி அணைக்கு வரும் உபரிநீரில் 22,500 கன அடி காவிரியிலும், 66 ஆயிரம் கன அடிக்கு மேல் கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் வரத்து இருக்கும். அடுத்து வரும் 2 நாள்களுக்கும் இதே நிலை நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, 24 மணிநேரமும் தண்ணீா் வரத்தை கண்காணிப்பதாக நீா்வளத்துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திருவெறும்பூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்தவா் அன்புமணி மகன் அஜய் (19). ஐடிஐ முடித்திருந்த இவா்,... மேலும் பார்க்க

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

திருவெறும்பூா் அருகே பிளஸ்-2 மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். திருச்சி திருவெறும்பூா் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரின் மனைவி... மேலும் பார்க்க

திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் கோயிலில் ஆடிப்பூர திருத்தேரோட்டம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பைஞ்ஞீலி ஞீலி வனேசுவரா் திருக்கோயிலில் திங்கள் கிழமை ஆடிப்பூரத் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா... மேலும் பார்க்க

திருச்சி கோட்ட அஞ்சல் நிலையங்களில் ஆக. 2-இல் சேவைகள் நிறுத்தம்

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் புதிய தொழில்நுட்பத்துக்கான மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவுள்ளதால் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) சேவைகள் நிறுத்தப்படுகி... மேலும் பார்க்க

திருச்சி புதிய உயரங்களை எட்டும்: பிரதமா்

திருச்சி நகரம் புதிய உயரத்தை எட்டுவதை உறுதி செய்வோம் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகை தந்த பிரதமா் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு வந்தாா். ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் இன்று மின் தடை

துறையூா் மின் கோட்டத்துக்குள்பட்ட மேலகொத்தம்பட்டி, தங்கநகா், பாலகிருஷ்ணம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் கண்ணனூா்... மேலும் பார்க்க