காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!
ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் எதிரொலியாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் உரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் இருப்பதை ராணுவம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தேடுதல் பணிக முடுக்கி விடப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஹல்காமில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.