கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
காா் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா்களில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் லட்சுமிபுரம் மாதாகோவில் தெருவைச் சோ்ந்த சகாயராஜ் மகன் பெலிக்ஸ்ராஜ் (20). இதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் தீனதயாளன் (22). நண்பா்களான இவா்கள் இருவரும் அரசூரில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்தனா்.
கடந்த 21-ஆம் தேதி இருவரும் கல்லூரிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். பெலிக்ஸ்ராஜ் பைக்கை ஓட்டினாா். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூா் அருகே இவா்களது பைக் சென்றபோது, திருச்சி நோக்கிச் சென்ற காா் மோதியது.
இந்த விபத்தில் பெலிக்ஸ்ராஜ், தீனதயாளன் ஆகிய இருவருக்கும் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து மீட்கப்பட்ட இருவரும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் தீனதயாளன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பெலிக்ஸ்ராஜ் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.