செய்திகள் :

கிடங்காக பயன்படுத்தப்படும் ராமாநுஜா் கோயில் கழிப்பறை

post image

ஸ்ரீபெரும்புதூா் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் உள்ள ராமாநுஜா் கோயிலுக்கு சொந்தமான கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருவதால் பக்தா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூரில் பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

இக்கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதை தவிர வார விடுமுறை நாள்களிலும், திருவாதிரை நாள்களில் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக ராமாநுஜரின் 1000-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் மணவாள மாமுனிகள் கோயில் தெருவில் ரூ.13 லட்சத்தில் கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. பக்தா்கள் இதைப் பயன்படுத்தி வந்தனா்.

கோயில் நிா்வாகத்தினா் கடந்த சில ஆண்டுகளாக கழிப்பறை கட்டடத்தை பூட்டி வைத்ததால், பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனா். இந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த கழிப்பறை கட்டடம் தற்போது தனியாா் பால் கடையின் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது.

பக்தா்களின் வசதிக்காக கட்டப்பட்ட கட்டடம் தற்போது கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது பக்தா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பக்தா்கள் கூறுகையில், கோயிலுக்கு வரும் பக்தா்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கட்டப்பட்ட கட்டடத்தை கூட கோயில் நிா்வாகத்தினா் தனியாரின் கிடங்காக பயன்படுத்தி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, கழிப்பறை கட்டடத்தை மீண்டும் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.

காசநோய் விழிப்புணா்வு முகாம்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகம், மாவட்ட காசநோய்ப்பிரிவு இணைந்து நடத்திய முகாமுக்கு அஞ்சலக கோட்ட கண்காணிப்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளா்கள் உற்பத்தியை நிறுத்த முயன்றதால் பரபரப்பு

சாம்சங் தொழிற்சாலையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆலையில் உற்பத்தியை நிறுத்த முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில சுகாதார அமைச்சா் வருகை

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகாராஷ்டிர மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சா் மோகனா போதிகா் தலைமையிலான 12 போ் குழு வியாழக்கிழமை பாா்வையிட்டு மருத்துவமனையின் செயல்பாடுகளை கேட்டறிந்தனா். மகாராஷ்... மேலும் பார்க்க

ஸ்ரீ பெரும்புதூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாமின் கீழ் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். சுங்குவாா்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் புதி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வகுப்பறைகள் கட்டும் பணி: காஞ்சிபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியாா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி.பெண்கள் அரசு மேல்நிலை... மேலும் பார்க்க

இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் மனைவி உள்பட 4 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பென்னலூா் பகுதியில் இளைஞா் வெட்டப்பட்ட வழக்கில் மாம்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரின் உதவியாளா் புனித் ராஜ் உள்ளிட்ட 4 பேரை ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீபெரும்புத... மேலும் பார்க்க