செய்திகள் :

"கிரவுண்டுக்கு வேண்டாம்; குறிஞ்சிக்கு வந்துடுங்க..." - திமுக அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி!

post image

கிரிக்கெட் போட்டி!

தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தி.மு.க விளையாட்டு மேம்பட்டு அணியின் சார்பில் தி.மு.க நிர்வாகிகளுக்கு இடையே ஆன கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் அணி, சென்னை மாநகர மேயர் அணி, தலைமைக் கழக அணி, சட்டமன்ற உறுப்பினர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காகக் கடந்த சில தினங்களாகவே அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கும் தயாநிதிமாறன்

டென்னிஸ் பாலில் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மெரினா கிரிக்கெட் மைதானத்தில் வரும் 15-16 தேதிகளில் காலை 7.30-மணிக்குத் தொடங்கி பகல், இரவு போட்டியாக நடைபெறவுள்ளன. வெற்றிபெறும் முதல் அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணமும் ஒரு இருசக்கர வாகனமும், இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாய் பணமும் இருசக்கர வாகனமும், மூன்றாவது பரிசாக வெறும் 75 ஆயிரம் பணமும் வழங்கப்படவுள்ளன. மேலும் அணிகளில் சிறப்பாக விளையாடும் ஒருவருக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஒன்றும் வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

குறிஞ்சி வந்துடுங்க!

இந்த கிரிக்கெட் போட்டிகள் குறித்து விளையாட்டு மேம்பட்டு அணியின் துணைச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். "கடந்த ஒரு மாதமாக நாங்கள் அனைத்து அணி செயலாளர்களுக்கும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அழைப்பிதழ் கொடுத்துக்கொண்டிருந்தோம். தளபதியின் 72-வது பிறந்தநாளுக்குக் கழகத்தின் சார்பில் 72 அணிகளாகப் பிரித்து கிரிக்கெட் போட்டி நடத்துவதே முதல் திட்டம். முதலில் பெரிய அளவில் யாருக்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது. கடைசியில் சில அணிகள் ஆர்வம் காட்ட மற்றவர்களும் இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். கடைசியாக இருபது அணிகள் முடிவுசெய்யப்பட்டது. இந்த போட்டிகள் வரும் 15-ம் தேதி காலை 7.30 மணிக்கு மெரினா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குவதாகத் திட்டம்.

கிரிக்கெட் பயிற்சியில் சென்னை மேயர் பிரியா

இது குறித்து துணை முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அங்கிருந்து, 'முதல் நாள் மாலையே அனைத்து அணியைச் சேர்ந்தவர்களையும் இங்கு அழைத்து வந்துவிடுங்கள். அனைவரையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்து போட்டியைத் துணை முதல்வர் ஆரம்பித்து வைப்பார்' என்று சொல்லிவிட்டார்கள். அதன் பெயரில் குறிஞ்சியில் (துணை முதல்வருடைய இல்லத்தின் பெயர்) ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. ஞாயிறு அன்று இறுதிச் சுற்றில் விளையாடும் அணிகளுக்குப் பரிசுகளை வழங்க முதல்வரை அழைத்திருக்கிறோம். அவர் பெரும்பாலும் வருவதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார்கள்.

"விளையாட்டெல்லாம் இருக்கட்டும் இந்த அமைச்சர்கள், மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இந்த கிரிக்கெட் போட்டியில் காட்டும் ஆர்வத்தைக் கொஞ்சம் வளர்ச்சிப் பணிகளில் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்" என்று மக்களே கமெண்ட் அடிக்கிறார்கள்!

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Manipur: ``குடியரசு தலைவர் ஆட்சியைத் திரும்பப் பெறுங்கள்" - மணிப்பூரில் போராட்டத்தில் இறங்கிய மக்கள்

மணிப்பூரில் 2024 மே மாதத்தில் குக்கி, மெய்தி சமூகத்தினருக்கு இடையே வெடித்த மோதல், இன்னும் ஓயாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களைப் பிரதமர் மோடி ஒருமுறை கூட நேரில் சென்று பார்க்கவில்... மேலும் பார்க்க

NEP: ``தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லையென்றால் நிதி கிடைக்காது" - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்

மத்திய அரசின் மும்மொழி கொள்கை உள்ளிட்ட காரணங்களால் தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு இன்னும் ஏற்காமல் இருக்கிறது. மேலும், தேசிய கல்விக்கொள்கையை ஏற்காததால், கல்விக்கு மத்திய அரசு தரப்பில் ஒதுக்க வேண்... மேலும் பார்க்க

'கள்ளச்சாராய வியாபாரத்தை மூடி மறைக்கும் காவல்துறையே...' - கடுமையாக சாடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஹரிஸ் மற்றும் ஹரிசக்தி ஆகிய இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், 'கள்ளச்சாராயத்தை ஒழிக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்ல... மேலும் பார்க்க

இரட்டைப் படுகொலை: `விசாரணைக்கு முன்பே தீர்ப்பெழுதுவதுதான் ஸ்டாலின் மாடலா?'- சாடும் எதிர்க்கட்சிகள்

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் இளைஞர்கள் இரண்டு பேர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த மூவரால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தைப் பொறுத்த... மேலும் பார்க்க

'பிரசாந்த் கிஷோர் தான் வர வேண்டுமா... உங்களுக்கு மூளை இல்லையா?' - சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,"எனக்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு தேவை இருக்கிறது. இந்த மக்களுக்காக களத்துக்... மேலும் பார்க்க

'கோபாலபுரம் தாண்டி வெளியில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' - அண்ணாமலை

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமெரிக்காவில் தற்போது 29 லட்சம் இந்தியர்கள் இருக்கிறார்கள். அமெரிக்க அரசு 7,50,000 பேர் விதிகளை மீறி அங்கு த... மேலும் பார்க்க