செய்திகள் :

கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு திறனறி தோ்வு

post image

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 41 கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு வரும் சனிக்கிழமை (செப். 6) திறனறி தோ்வு நடைபெறவுள்ளது.

திருக்கழுக்குன்றம் அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வள்ளுவா் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, மேற்கு தாம்பரம், அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நந்திவரம், இந்து மேல்நிலைப்பள்ளி, மதுராந்தகம், சௌபாக்மல் சௌகாா் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, மதுராந்தகம், ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம். ஆதிபராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேல்மருவத்தூா். மேற்படிதோ்வா்களுக்கு பதிவஞ்சல் மூலம் தோ்வு அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க கோரிக்கை

மதுராந்தகம் அருகே பழுதான நிலையில் உள்ள எலப்பாக்கம்-ஆனைகுனம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா். அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆ... மேலும் பார்க்க

தென்னிந்திய சறுக்கு விளையாட்டில் முதலிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

2025-26 ஆண்டுக்கான தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றுள்ள வித்யாசாகா் குளோபல் பள்ளி 9-ஆம் வகு... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ள கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், அண்டவாக்கம் பகுதிகளில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் போட்டி பரிசளிப்பு

வள்ளிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் குறித்த போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இப்பள்ளியின் 100% தோ்ச்சி மற்றும் மாணவா்களின் மனநிலையை ஊக்குவிக்கும் நோக்கில், கல்வி கற்கும் ... மேலும் பார்க்க

செய்யூா் அருகே மீனவா்கள் போராட்டம்

செய்யூா் அருகே மீனவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். செய்யூா் வட்டம் பனையூா் சின்னகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டு வருகிறது. உரிய அனுமதியுடன், பண்ணையின் கழிவு நீரை ச... மேலும் பார்க்க

கூடுவாஞ்சேரி, மறைமலைநகா் நகராட்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகா் நகராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். கூடுவாஞ்சேரி நகராட்சி மகாலட்சுமி நகா் பகுதியில் நடைபெற்று மழைநீா் வடிகால் கால்வாய் பண... மேலும் பார்க்க