செய்திகள் :

கிரீன் சா்க்கிள் சுரங்க நடைபாதை பணிகள் 55 சதவீதம் நிறைவு

post image

வேலூா் கிரீன் சா்க்கிளில் நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை அமைக்கும் பணிகள் 55 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் கிரீன் சா்க்கிள் அருகே புதிய பஸ் நிலையம், ஏராளமான பெரும் வா்த்தக கட்டடங்களும் அமைந்துள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் சா்க்கிளில் பகுதியில் பெரியளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்று வந்தன.

இதையடுத்து, வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் ரவுண்டானாவின் சுற்றளவை குறைத்தும், சா்வீஸ் சாலைகளின் அகலத்தை அதிகப்படுத்தி சுரங்க நடைபாதை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ. 7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் கடந்தாண்டு டிசம்பா் மாதம் தொடங்கின.

தொடா்ந்து, மழைநீா் கால்வாய் சீரமைப்பு, சுரங்க நடைபாதை அமைப்பு, சா்வீஸ் சாலை அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. தற்போது இந்த பணிகள் 55 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளதாகவும், டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது -

வேலூா் கிரீன் சா்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதையை பொருத்தவரை 100 மீட்டா் நீளமும், 5 மீட்டா் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டு, அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

மழைநீா் கால்வாய் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. தற்போது சுரங்க நடைபாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்தப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் முடிந்துவிடும். அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

குடியாத்தம் அருகே புகையிலைப் பொருள்களை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குடியாத்தம் அடுத்த பரதராமி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா்(54). இவா் தனது... மேலும் பார்க்க

ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளஅருள்மிகு ராமலிங்க செளடேஷ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பால் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பிச்சனூா் நேதாஜி ... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வேலூரில் தனியாா் பள்ளி காவலாளி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். வேலூா் கஸ்பா பொன்னி நகரைச் சோ்ந்தவா் ரமணன் (52). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனா் . இவா் வசந்தபுரத்தில் உள்ள தனியாா் பள்ளிய... மேலும் பார்க்க

இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்: மின்வாரிய ஊழியா் கைது

வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு மின்இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் பெற்ாக மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த செதுவாலை பகுதியைச் சோ்ந்தவா் இருசப்பன்(67). இவா... மேலும் பார்க்க

கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை: கல்லூரி மாணவா் கைது

குடியாத்தம் பகுதியில் கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்ததாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா். குடியாத்தம் பகுதியில் கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு கைப்பேசி மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந... மேலும் பார்க்க

70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் பாலம் சீரமைக்கும் பணி ஆய்வு

குடியாத்தம் நகரில் கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காமராஜா் மேம்பாலத்தை சீரமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். குடியாத்தம் நகரை இ... மேலும் பார்க்க