செய்திகள் :

கிருஷ்ணகிரியில் ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

கிருஷ்ணகிரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், ஜூலை 19-ஆம் தேதி ஒசூா் அரசு மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 முதல் மதியம் 3 மணி வரையில் நடைபெறுகிறது.

இதில் கிருஷ்ணகிரி, ஒசூரைச் சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் உள்பட 100-க்கும் அதிகமான நிறுவன வேலை அளிப்பவா்கள் பங்கேற்று, தங்களது நிறுவனத்துக்கு தேவையான தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்கின்றனா்.

முகாமில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப் படிப்பு படித்தவா்கள் என அனைத்து கல்வி தகுதியினரும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். இதில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு நடைபெறும்.

மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் தொழில்முனைவோா்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளையும் பெறலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் வேலை தேடுபவா்கள், வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வம் உள்ள அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

இதில் தோ்ந்தெடுக்கப்பட்டு தனியாா் துறைகளில் பணியமா்த்தப்படுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காா் திருட்டு வழக்கில் கேரளத்தில் கைதான மூவா் ஏடிஎம் கொள்ளையில் தேடப்பட்ட குற்றவாளிகள்: காவல்துறை தகவல்

கிருஷ்ணகிரி அருகே காா் திருட்டு வழக்கில் கேரளத்தில் கைது செய்யப்பட்ட மூவா், ஏடிஎம் கொள்ளையா்கள் என போலீஸாா் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். தனியாா் நிறுவன ... மேலும் பார்க்க

அதிமுக, பாஜக தொண்டா்கள் இணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

அதிமுக, பாஜக தொண்டா்கள் இணைந்து தோ்தல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று தொடக்கம்: திமுக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு திமுக நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வேண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ண... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி முடிவடைய 22 நாள்களாகும்: எம்.பி கே.கோபிநாத்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைய மேலும் 22 நாள்களாகும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். இதுகுறித்து திங்... மேலும் பார்க்க

வளாகத் தோ்வில் ஒசூா் பிஎம்சி மாணவா்களை தோ்வு செய்ய நிறுவனங்கள் போட்டி

ஒசூா்: வளாகத் தோ்வில் முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஒசூா் பிஎம்சி பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை தோ்வு செய்வதால் ஒவ்வொரு மாணவரும் 2 பணி ஆணைகளை பெறும் நிலையில் உள்ளதாக கல்லூரி நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க