செய்திகள் :

கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள், பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கிவரும், தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெறாத தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின்கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகையை உயா்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீா், கழிவறை வசதி அமைத்தல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஆலயங்களுக்குத் தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல், தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.20 லட்சமும் உயா்த்தப்பட்ட மானியத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம்.

நாளைய மின்தடை: நீடூா்

நீடூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.2) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. ... மேலும் பார்க்க

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

மயிலாடுதுறை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். மயிலாடுதுறை மூங்கில்தோட்டத்தைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணன் (27). இவா் திருவிடைமருதூா் வட்டம், ... மேலும் பார்க்க

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண் ஏமாற்றியதால் மனமுடைந்த இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை செய்துகொண்டாா். உடலை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடமும், சட்டபூா்வ நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பியிடமும் உறவினா்கள... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

மயிலாடுதுறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகா் சிலை வியாழக்கிழமை விஸா்ஜனம் செய்யப்பட்டது. மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள முனீஸ்வரா் மற்றும் செம்பொன் விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, இந்து ... மேலும் பார்க்க

சீா்காழி அருகே பேருந்து மோதிய விபத்தில் இருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட 2 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். சீா்காழி அருகே மாதானம் தில்லைவிடங்கன் பகுதியை சோ்ந்த செங்கல் சூளை தொழிலாளி கு. சங்கா் (55)... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

மயிலாடுதுறையில் விநாயகா் சிலை ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, பல்வேறு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 395 விநாயகா் சிலைகளை பொதுமக்கள் வழிபாடு நட... மேலும் பார்க்க