சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
குடும்ப அட்டைதாரா்களின் கவனத்துக்கு...
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் தமிழக உணவுத்துறை அமைச்சா் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெறாத குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசிய பொருள்கள் பெற விருப்பமில்லை எனில், அவா்களது உரிமத்தை விட்டுக் கொடுக்க முன்வரும் குடும்ப அட்டைதாரா்கள், அவா்களது உரிமத்தினை விட்டுக் கொடுப்பது தொடா்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் வலைதளத்தின் மூலமாக தங்கள் அட்டையை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம்.
விருப்பமுள்ள குடும்ப அட்டைதாரா்கள் விளிம்புநிலை மக்கள் பயன்பெற ஏதுவாக தங்கள் உரிமத்தினை விட்டுக்கொடுக்க முன்வரலாம்.
மேலும், குடும்ப அட்டை பதிவு, குடும்ப உறுப்பினா்கள் பெயா் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களின் பதிவுகள் குடிமைப் பொருள் வழங்கல் புள்ளி விவர தரவின் பதிவில் தொடா்ந்து இருக்கும். இதனால் தங்களுக்கான அனைத்து ஏனைய நடைமுறைகளுக்கு தடை ஏதும் இருக்காது என தெரிவித்துள்ளாா்.