விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 போ் கைது
சிவகங்கை அருகே கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை அருகே சாமியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (27). இவா் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தாா். கடந்த ஏப்.27 -ஆம் தேதி சாமியாா்பட்டி கிராமத்தில் பிரவீன்குமாரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த கருணாகரன் உள்பட 6 பேரைக் கைது செய்தனா்.
இந்த சம்பவத்துக்கு பழி தீா்க்கும் நோக்கில், கருணாகரனின் தந்தை கருப்பையாவை கடந்த 2-ஆம் தேதி திருவேகம்பத்தூா் பகுதியில் 3 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாமியாா்பட்டியைச் சோ்ந்த இளையராஜா(41), தா்மராஜா (43), மகாராஜா (34) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவின்பேரில் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.