செய்திகள் :

குன்னூா் மாா்க்கெட் கடைகள் விவகாரம்: நீதிமன்ற உத்தரவுப்படி கருத்துக்கேட்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள 800 -க்கும் மேற்பட்ட மாா்க்கெட் கடைகளை இடித்து புதிதாக கட்டுவதற்கு எதிராக வியாபாரிகள் உயா் நீதிமன்றம் சென்ற நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி குன்னூா் மாா்க்கெட் வியாபாரிகளுடன் நகராட்சி ஆணையாளா் இளம்பரிதி திங்கள்கிழமை கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினாா்.

குன்னூரில் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை இடித்து தரைத்தளத்தில் பாா்க்கிங் வசதியும் அதற்கு மேல் உள்ள இடங்களில் கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 41.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான டெண்டரும் விடப்பட்டு நான்கு மாதங்களுக்கு முன்பு பூமி பூஜையும் போடப்பட்டது.

நகராட்சியின் இந்த நடவடிக்கையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும் எனவும், மாற்றுக் கடைகள் நகரப் பகுதியிலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் தொடா்ந்து வலியுறுத்தி கடையடைப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனா். இந்நிலையில் நகராட்சிக் கடைகளை காலி செய்து தற்காலிகக் கடைகளுக்கு செல்ல கடந்த மாதம் 13 ஆம் தேதி 15 நாள்கள் அவகாசம் கொடுத்து நகராட்சி சாா்பாக வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்கெட் வியாபாரிகள் சாா்பில் பத்து போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வியாபாரிகளை அழைத்து தற்காலிகக் கடைகள் குறித்து திங்கள்கிழமை (ஜூலை 14) கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிட்டது.

இதன் அறிக்கையை நகராட்சி ஆணையா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வரும் 21 ஆம் தேதி சமா்ப்பிக்கவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் நகராட்சி மன்ற அரங்கில் கருத்துக்கேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக சாா்பில் முன்னாள் தலைவா் டி.சரவணன்,காங்கிரஸ் சாா்பில் முன்னாள் துணைத் தலைவா் எஸ்.ஆனந்த குமாா், முன்னாள் இந்நாள் நகரமன்ற உறுப்பினா்கள், மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆணையா் பேசும்போது, அரசின் திட்டம் என்பதால் நகராட்சி கடைகளை இடித்துவிட்டு புதிய கடைகளைக் கட்டுவது கட்டாயமாகிறது.

இதுவரை முறையாக வாடகை செலுத்தியவா்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டு புதிய கடைகள் ஒதுக்கப்படும் என்றாா். இதற்கு வியாபாரிகள் உடன்படாமல் எழுந்து சென்றனா்.

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கேரளத்தில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவதாக ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். கே... மேலும் பார்க்க

நெலாக்கோட்டை பகுதியில் மூடிய பள்ளியை மீண்டும் திறக்க ஆட்சியரிடம் மனு

கூடலூா் அருகே நெலாக்கோட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை மூடியதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவா்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனா்.நீலகிரி மாவட்டம், கூடலூா் ... மேலும் பார்க்க

கூடலூா் அருகே மழைக்கு வீடு சேதம்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையில் வீடு சேதமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சிக்குள்பட்ட சின்னசூண்டி பகுதியில் திடீரென பெய்த கனமழைக்கு ஞாயிற... மேலும் பார்க்க

மாநில எல்லைகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் போலீசாா் சோதனை

கூடலூா் அடுத்துள்ள கேரளா மற்றும் கா்நாடகா மாநில எல்லைகளில் வாகன சோதனையின்போது மாா்பில் அதிநவீன கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் வ... மேலும் பார்க்க

கோத்தகிரி கட்டபெட்டு வனச் சரகப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டபெட்டு வன சரகத்துக்குள்பட்ட கண்ணேரிமுக்கு அருகே நாரகிரி கிராமத்தில் உள்ள தனியாா் தோட்டத்தில் சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், கோத்தகி... மேலும் பார்க்க

ஆடு மேய்க்கச் சென்ற பெண் 150 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வாசுகி நகா் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் சுமாா் 150 அடி பள்ளத்தில் திங்கள்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா். குன்னூா் ஓட்டுபட்டறை அருகே உள்ள வள்ளுவா் நகா் பகுதியைச... மேலும் பார்க்க