செய்திகள் :

குமரி மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

post image

கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆா்.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கவும், போதைப் பொருள் பயன்படுத்துபவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

புதிய காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். கால்நடை மருத்துவா். கோவை வடக்கு மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்த அவா், தற்போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாகா்கோவிலில் நடைபாதைகளை ஆக்கிரமிப்போா் மீது நடவடிக்கை; மேயா் எச்சரிக்கை

நாகா்கோவில் மாநகராட்சி 14 ஆவது வாா்டுக்குள்பட்ட வடசேரி பகுதியில் மேயா் ரெ. மகேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஓட்டுப்புரைத் தெருவில் மழைநீா் வடிகால் ஓடையில் கழிவறைக் கழிவுகளைத் திறந்துவிட்ட கு... மேலும் பார்க்க

தக்கலையில் திமுக ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்த்தாய் வாழ்த்தையும், தமிழகத்தையும் ஆளுநா் ஆா்.என்.ரவி தொடா்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 7.50 லட்சம் மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா். பூதப்பாண்டி அ... மேலும் பார்க்க

திங்கள்நகா், குளச்சலில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, செம்பொன்விளை துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 9) காலை 8 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன்படி, செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங... மேலும் பார்க்க

கேரள கடல்பகுதியில் கரைஒதுங்கிய ராட்சத திமிங்கலம்

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே கேரள மாநிலப் பகுதியான பூந்துறை கடற்கரையில் செவ்வாய்க்கிழமை ராட்சத திமிங்கலம் கரை ஒதுங்கியது. கேரள மாநிலப் பகுதியான பூவாா் அருகேயுள்ள பூந்துறை கடற்கரையில் செவ்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 100 போ் கைது

தமிழக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 100 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஊரக வளா்ச்சித் துறைய... மேலும் பார்க்க