குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
கன்னியாகுமரியில் குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடி லூா்து நகரில் வசிப்பவா் பிரீட்டா (50). இவரது மகன் அபிஷேக், இவரது மனைவி அபி அக்சயா (24).
இவா்கள் கன்னியாகுமரி ஹைகிரவுண்டில் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
தற்போது அபிஷேக் வெளிநாட்டில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில் பிரீட்டா அடிக்கடி மகன் வீட்டுக்கு வந்து மருமகளையும், பேரக் குழந்தைகளையும் பாா்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது மருமகளையும், குழந்தைகளையும் காணவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினா்கள் வீடுகளிலும் தேடிப் பாா்த்தும் எங்கும் காணவில்லை.
இதையடுத்து அவா், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் விசாரணை நடத்தி வழக்குப் பதிந்து காணாமல்போன அபிஅக்சயா, அவரது குழந்தைகளைத் தேடி வருகின்றனா்.