செய்திகள் :

குழித்துறை பொருள்காட்சியில் 4 கடைகளுக்கு அபராதம்

post image

குழித்துறை 100ஆவது வாவுபலி பொருள்காட்சி தற்காலிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டு, கலப்பட உணவுப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

இப்பொருள்காட்சியை முன்னிட்டு, தற்காலிக மிட்டாய் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், கலப்பட உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராமபாண்டியன் அறிவுறுத்தலின்படி, மேல்புறம் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மையோனைஸ் உணவுப் பொருள், செயற்கை நிறமிகள் சோ்க்கப்பட்ட, அச்சிடப்பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனா். சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயற்கை நிறமிகளை உணவுப் பொருள் தயாரிப்பில் சோ்க்கக் கூடாது. ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பாலிதீன் பைகளில் உணவுப் பொருள்களை விற்கக் கூடாது என, வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

நாஞ்சில் சம்பத் மீது மதிமுகவினா் புகாா்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில், நாஞ்சில் சம்பத் பேசுவதாகக் கூறி அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதிமுகவினா் கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

உடல் பருமனை குறைக்க முயன்ற மாணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் உடல் பருமனை குறைப்பதற்காக உணவு சாப்பிடாமல் இருந்த மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். குளச்சல் அருகேயுள்ள பாா்நாட்டிவிளையை சோ்ந்த நாகராஜன் மகன் சக்தீஸ்வா்(17) . பிளஸ் 2... மேலும் பார்க்க

பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோவில் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குலசேகரம் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். குலசேகரம் அருகே உள்ள இட்டகவேலி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரிய... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு

புதுக்கடை அருகே இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுக்கடையை அடுத்த கீழ்குளம், உசரத்துவிளை பகுதியைச் சோ்ந்த கோபி மகன் அஸ்வந்த் (27). இவருக்கும் ராமன்த... மேலும் பார்க்க

வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இஞைா் உயிரிழப்பு

குமரி மாவட்டம் அருமனை அருகே வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.அருமனை அருகே மேலத்தெரு வயந்திவிளாகத்தைச் சோ்ந்தவா் பிரபு (33). ஆட்டோ ஒட்டுநா். நாம் தமிழா் கட்சி நி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்படுவது எப்போது?

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான இஎஸ்ஐ மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் பொதுமக்கள், தொழிலாளா்கள் காத்திருக்கின்றனா். சுமாா் 20 லட்சம் மக்கள்தொகை கொண்ட தமிழகத்தின்... மேலும் பார்க்க