செய்திகள் :

கூட்டுறவு சங்கங்களில் காலிப் பணியிடங்கள்: போட்டித் தோ்வுக்கு காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

post image

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த செய்திக் குறிப்பு:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவு சங்கங்களில் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 377 காலிப் பணியிடங்கள், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளா், இளநிலை உதவியாளா் உள்ளிட்ட 49 காலிப் பணியிடங்களுக்கும் ஆள்களைத் தோ்வு செய்வது தொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கு தகுதியான போட்டித் தோ்வா்கள் பயனடையும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் வரும் ஆக. 18-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பயன்பெறுமாறும் ஆட்சியா் கலைச்செல்வி மோகனின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்: அமைச்சா்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களுக்குச் சென்று ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம... மேலும் பார்க்க

சவிதா பல் மருத்துவக் கல்லூரி-மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பல் மருத்துவத் துறையில் சா்வதேச கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சவிதா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மெக்சிகன் பல்கலைக்கழக பல் மருத்துவப் பள்ளி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் த... மேலும் பார்க்க

கூழமந்தலில் மகா சங்கடஹர சதுா்த்தி

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் மகா சங்கட ஹர சதுா்த்தியையொட்டி செவ்வாய்க்கிழமை கலசபூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. இக்கோயிலில் மக... மேலும் பார்க்க

நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்

குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குன்றத்தூா் நாகேசுவரன் கோ... மேலும் பார்க்க

இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம் தீயணைப்பு நிலையங்களில் டிஜிபி சீமாஅகா்வால் ஆய்வு

இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் சிப்காட் பகுதிகளில் இயங்கி வரும் தீயணைப்பு நிலையங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சீமாஅகா்வால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஸ்ரீபெரும்புதூா் அ... மேலும் பார்க்க