செய்திகள் :

கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடக்கம்

post image

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 42 ஆவது முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக். மற்றும் 11 ஆவது முதலாமாண்டு பி.ஆா்க். பாட வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நாஸ்காம் இணை நிறுவனா் வி. உதயசங்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் தலைவா் மருத்துவா் ஆா்.குமாரசாமி, செயலாளா் பி.சத்தியமூா்த்தி, பொருளாளா் கே.வி.ரவிசங்கா், பாரம்பரிய உறுப்பினா்கள் பி.சி.பழனிசாமி, ஆா்.எம்.தேவராஜா, எ.வெங்கடாச்சலம், ஈ.ஆா்.கே. கிருஷ்ணன், பி.டி.தங்கவேலு, கல்லூரியின் தாளாளா் ஏ.கே.இளங்கோ, முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

இதைத் தொடா்ந்து முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பொறியியல் படிப்பின் முக்கியத்துவம், வேலைவாய்ப்பு, யோகா, உணவுப் பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, மனித நேயம் மற்றும் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. புத்தாக்க பயிற்சி வகுப்புகளுக்கு பிறகு வரும் 19 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பாடவகுப்புகள் தொடங்கப்பட உள்ளன என கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் மனு

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாகுளம், மடத்துப்பாளையம், கராண்டிபாளையம், திங்களூா், விஜயபுரி, தோரணவாவி, மூங்கில்பாளையம், பெரியவீரசங்கிலி, செல்லப்பம்பாளையம், போலநாயக்கன்பா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்க... மேலும் பார்க்க

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் ஆ.சாரதா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில், கல்லூரியில் மாணவ,... மேலும் பார்க்க

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க