செய்திகள் :

கொடைக்கானல்: மயங்கி விழுந்து இறந்த தாய் யானை; எழுப்ப போராடும் குட்டி யானை; கலங்க வைக்கும் நிகழ்வு!

post image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராம பகுதிகளிலும், விவசாய நிலங்களில் முகாமிடுவது வாடிக்கையான ஒன்றாக மாறி வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் நேற்று முன்தினம் பெண் யானை ஒன்று உடல் மெலிந்த நிலையில் குட்டியுடன் இந்தப் பகுதிக்கு வந்தது.

நேற்று பள்ளங்கி, கோம்பை பகுதி அருகே கணேசபுரம் பகுதியில் உள்ள செல்வம் என்பவரது தனியார் தோட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை மயங்கி கீழே விழுந்து எழ முடியாமல் இருப்பதை தோட்ட உரிமையாளர் பார்த்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். 

குட்டி யானையின் பாசப்போராட்டம்

இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் பெண் யானை அருகே இருந்த ஒன்றரை வயதுடைய குட்டி ஆண் யானை தனது தாய் யானையை யாரும் நெருங்க விடாமல் அனைவரையும் முட்டுவது போல் மிரட்டி தனது பாசப் போராட்டத்தை நடத்தி வந்ததது.

இதனால் சிகிச்சை அளிக்க பெண் யானையிடம் இருந்து குட்டி யானையைப் பிரிக்க வனத்துறையினர் பெரும் சிரமம் அடைந்தனர்.

பல முயற்சிகள் செய்தும் பலனாளிக்காத நிலையில் முடிவில் ஜேசிபி வாகனம் கொண்டு பெண் யானையை குட்டி யானை நெருங்க விடாமலும், வெடி வெடித்து பிரித்து அருகே உள்ள வேறு பகுதிக்கு விரட்ட்டி அங்கு மக்காச்சோளம், வாழை இலைகளை குட்டி யானைக்குக் கொடுத்து குட்டியானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

குட்டியானையின் பாசப்போராட்டம்

இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் பெண் யானைக்கு குளுக்கோஸ், ஆண்டி பயாடிக் மயக்க மருந்துகள் உள்ளிட்டவற்றைச் செலுத்தி சிகிச்சை அளித்தனர். மேலும் சிறப்பு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகிறது.

பெண் யானை வயது முதிர்ந்த நிலையில் (50) கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு குட்டி ஈன்றது காரணமாகப் போதிய சத்துக்கள் இல்லாததால் பெண் காட்டு யானை திடீரென மயங்கி கீழே விழுந்து இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். 

பெண் யானைக்கு முழுமையாக சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னரே எழுப்ப முடியும் என மருத்துவர்களும், வனத்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர். இந்நிலையில் தாய்யானை சிகிச்சை பலனின்றி இறந்து போனது. இந்த நிலையில் இறந்த போன தாய் யானையின் அருகிலேயே அதனுடைய குட்டி யானை சுற்றி வந்து எழுப்ப முயற்சிக்கும் பாசப்போராட்டம் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`2 யானைகளுக்கிடையே மோதல்' பாகன் செய்த விபரீதம்; அலறியடித்து ஓடிய யானை - வனத்துறை நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தெப்பக்காடு பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. ஆசியாவின் பழைமை வாய்ந்த யானைகள் முகாம்களில் ஒன்றாக வ... மேலும் பார்க்க

World's Ugliest Dog: `உலகின் அவலட்சணமான நாய்' போட்டியில் ரூ.4.3 லட்சம் பரிசு - ஏன் தெரியுமா?

கலிபோர்னியாவின் சான்டா ரோசாவில் உள்ள `சோனோமா கவுண்டி' கண்காட்சியில் கடந்த வாரம் நடைபெற்ற உலகின் மிக அவலட்சணமான நாய்கள் போட்டியில், இரண்டு வயது மதிக்கதக்க முடி இல்லாத பிரெஞ்சு புல்டாக் பெடுனியா என்ற நா... மேலும் பார்க்க

Nilgiris: அரிசி, பருப்பு எல்லாமே காலி, இரவோடு இரவாக ரேஷன் கடையை முடித்த யானைகள்

நீலகிரி மலையில் இயற்கையான வாழிடச் சூழல்களை இழந்துத் தவிக்கும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்பு பகுதிகளிலும் விளை நிலங்களிலும் நடமாடி வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் முறையற்ற வக... மேலும் பார்க்க

கோவை: 25 அடி கிணற்றில் தவறி விழுந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் கோவை, போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அவை உணவுக்காக காடுகளில் இரு... மேலும் பார்க்க

``உலகின் மிகச்சிறிய பாம்பு; 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது..'' - சூழலியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

உலகின் மிகச் சிறிய பாம்பாக அறியப்படும் பார்படோஸ் த்ரெட் பாம்பை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வுக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பாம்பு இழை போன்ற மெல்லியதாக இருக்குமாம், அதன் முழு வளர்ச்... மேலும் பார்க்க