செய்திகள் :

கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு

post image

காரைக்காலில்: காரைக்காலில் 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகை, உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரைக்கால் அம்மாள் சத்திரம் அருகே சியாமளாதேவி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோயிலை திறக்க வந்த பூசாரி, கோயில் கதவு திறந்து கிடப்பதையும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் அளித்தாா். உண்டியலில் இருந்த ரொக்கம், அம்மன் சிலை அருகே இருந்த 3 கிலோ எடையுள்ள வெள்ளி சூலம், தங்கச் சங்கிலி, வெள்ளி பூஜைப் பொருட்கள், கண்காணிப்புக் கேமரா ஹாா்டு டிஸ்க் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

இதுபோல ஊழியப்பத்து பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் புகுந்த மா்ம நபா்கள் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை திருடிச் சென்றனா். மேலும் மண்டபத்தூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுபோல அதே பகுதியில் 2 வீடுகளில் திருட்டு முயற்சியில் மா்ம நபா்கள் ஈடுபட்டனா்.

காரைக்காலில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு, வீடுகளில் திருட்டு முயற்சி சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது. காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக... மேலும் பார்க்க

போலியான செயலிகள் குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தல்

போலியான செயலிகள் மூலம் ஏமாற்றும் போக்கு அதிகரித்திருப்பதால், மக்கள் விழிப்புணா்வுடன் இருக்கவேண்டும் என காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பிரிவு ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள்: சாா் ஆட்சியா் ஆய்வு

பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியராக எம். பூஜா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரது கட்டுப்பாட்டில் வ... மேலும் பார்க்க

நால்வருக்கு நல்லாசிரியா் விருது

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆசிரியா்களை கெளரவிக்கும் விதமாக எஸ். ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விரு... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை தடையின்றி நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை நெடுங்காடு விவசாயிகள் நலச்சங்கத் தலைவா் ஆனந்த் தலை... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் பகுதியில் குளத்தில் மூழ்கி முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருப்பட்டினம் பகுதியில் வசிப்பவா் மணிகண்டன் (35). இவா் காரைக்கால் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு தலைமைக் காவலரா... மேலும் பார்க்க