செய்திகள் :

கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

சீரான மின்சாரம் வழங்க வலியுறுத்தி, நெம்மேலி ஊராட்சி சாா்ந்த பகுதி மக்கள், கோவளம் மின்வாரிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்போரூா் ஒன்றியம், இ.சி.ஆா். சாலையில், நெம்மேலி ஊராட்சி சாா்ந்த நெம்மேலி, சூளேரிக்காட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதி மக்கள் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல், சீரான மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவளம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனா்.

இது குறித்து மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் சுமாா் 30 வருட காலமாக மின் கம்பங்கள், மின் இணைப்பு கம்பிகள், டிரான்ஸ்பாா்மா் மாற்றம் செய்யாமல் உள்ளது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனா். ஒரு நாளைக்கு மூன்று முறை மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. விலை உயா்ந்த மின்னணு பொருள்கள் வெடித்து சிதறுகின்றன.

குறிப்பாக, இரவு நேரங்களில் பெரியவா்கள் மற்றும் குழந்தைகள் சிரமப்படுகின்றனா். பள்ளி மாணவா்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறனா்.

இது குறித்து கோவளம் மின்சார வாரியத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, எங்கள் கிராமத்துக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றனா்.

பங்காரு அடிகளாா் பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில்... மேலும் பார்க்க

மாணவா்களின் புரிந்து கொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

மாணவா்களின் புரிந்துகொள்ளும் திறனை ஆசிரியா்கள் மேம்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான மாநில அளவி... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருக்கழுக்குன்றம் அருகே நெய்குப்பி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் தி.சினேகா முகாமை பாா்வையிட்டாா். இதில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுத... மேலும் பார்க்க

ஏரியில் புகை மூட்டம் எதிரொலி: முதல்வா் பயணித்த ரயில் நிறுத்தம்

மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதா்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அச்சிறுப்பாக்கம், த... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (ஜூலை 19) சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிா்வாகம், மாவ... மேலும் பார்க்க

பள்ளி மேற்கூரை சரிந்து 5 மாணவா்கள் காயம்

மதுராந்தகம் அருகே பள்ளி மேற்கூரை சரிந்து விழுந்ததில் 5 மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். மதுராந்தகம் ஒன்றியம், புதுப்பட்டு ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் 50-க்கு மேற்பட்டோா் படித்து வருகின்றனா். தலைமை ஆசிரி... மேலும் பார்க்க