செய்திகள் :

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

post image

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.

கோவை

ஏதாவது கொலை சம்பவமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் அவர்களும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள்.

காவல்துறை விசாரணையில், அது திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவரின் கை என்பது தெரியவந்தது. அழகுபாண்டிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கணவன் - மனைவி பிரச்னை

இதனிடையே அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த அழகுபாண்டி, கள்ளபாளையம் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவரின் வலது கை மற்றும் கால்கள் துண்டாகியுள்ளது. தற்போது அழகுபாண்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அழகுபாண்டியின் துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்கள், கள்ளப்பாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அழகுபாண்டி

அப்போது அங்கிருந்து ஒரு நாய்  கையை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி: ``ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புது... மேலும் பார்க்க

புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை

கரன்சிகளால் காற்றில் பறக்கவிடப்படும் விதிகள்சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநி... மேலும் பார்க்க

`பிரிந்த காதலை சேர்க்க' - பிளாக் மேஜிக் இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ரூ.16 லட்சத்தை இழந்த மும்பை பெண்

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்கள், முகநூல் பக்கங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் இப்போது உறவுகள் பேசிக்கொள்வதை விட போனில் தான் அதிகமான நேரம் மூழ்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பிறந்த நாள் மது விருந்தில் தகராறு - மாணவரை `ரெஸ்டோ' பார் ஊழியர் கொலை செய்த பின்னணி

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க