செய்திகள் :

கோவை: பேரூர் கோயிலில் ஆகம விதிகளை மீறி விஐபி தரிசனம் - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாண்டியராஜன்!

post image

சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜன். அண்மையில் திருமலா பால் நிறுவனம் ஊழியர் தற்கொலை வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் பாண்டியராஜன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

அவர் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை என்று பணியாற்றிய பெரும்பாலான பகுதிகளில் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாண்டியராஜன்

சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக்கு எதிராக போராடிய பெண்ணை கன்னத்தில் அறைந்தது, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது என்று பாண்டியராஜனின் சர்ச்சை பட்டியல் மிகவும் நீளமானது.

பாண்டியராஜன் ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார். பணியில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட பயணங்களிலும் சர்ச்சையில் சிக்க தொடங்கியுள்ளார். பாண்டியராஜன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் சென்றுள்ளார்.

பாண்டியராஜன் விஐபி தரிசனம்

இரவு நடை சாத்தப்பட்ட நிலையில், ஆகம விதிகளை மீறி பாண்டியராஜனுக்கு விஐபி தரிசனம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பக்தர்கள் எடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பக்தர்கள் பாண்டியராஜன் மற்றும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“முதலமைச்சராக இருந்தாலும் ஆகம விதிகளை மீறக் கூடாது. உங்களுக்கு உள்ளே செல்ல யார் அனுமதி கொடுத்தனர்.” என்று பக்தர் ஒருவர் பாண்டியராஜனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பாண்டியராஜன் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “உங்கள் வேலையை பாருங்கள்.” என்று மட்டும் கூறினார்.

பாண்டியராஜன்

இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியராஜன் மற்றும் அவருக்கு விஐபி தரிசனத்துக்கு அனுமதி வழங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோயில் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தஞ்சாவூர்: `இவர்கள் மீது பரிவு காட்டுங்கள்' - அறப்பணியால் நெகிழ வைக்கும் ஆட்சியர்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவடைந்து விட்ட நிலையில் கடந்த 21ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டிங் ஒன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திய... மேலும் பார்க்க

Vaiko: `வைகோ பாஜக பக்கம் வந்தால் மீண்டும் MP ஆகலாம்’ - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

இன்றுடன் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஸ்டாலினால் 2019-ல் மாநிலங்களவைக்கு அனு... மேலும் பார்க்க

``முறைகேடு; அழுத்தம்.. நல்வழிகாட்ட யாரும் இல்லை'' - உயிரை மாய்த்த பொதுப்பணித்துறை அதிகாரி கடிதம்

அசாம் மாநில பொதுப்பணித்துறையில் (PWD) ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த குவஹாத்தி பகுதியைச் சேர்ந்த ஜோஷிதா தாஸ் என்ற 26 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிரு... மேலும் பார்க்க

புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் வேட்டி, சேலை அணியாவிட்டால் அனுமதியில்லை!- ஜிப்மர் உத்தரவால் சர்ச்சை

பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் அவர்களின் விருப்ப ஆடையை அணிந்து, அதன்மீது கறுப்பு நிற அங்கியை அணிந்து வருவார்கள். இந்த நிலையில் கடந்த 2024 ஆகஸ்ட் 23 அன்று, `பட்டமளிப்பு விழ... மேலும் பார்க்க

Vaiko: ``தமிழ் ஈழ விடுதலைகாக வீர உரையாற்றினேன்; அதற்காக..'' - வைகோவின் கடைசி மாநிலங்களவை உரை

இன்றுடன் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறுகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. 1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை கலைஞர் கருணாநிதியால் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் ஸ்டாலினால் 2019-ல... மேலும் பார்க்க

Air India Crash: 'இது எங்க உறவினரின் உடல் இல்ல' - இங்கிலாந்தில் அதிருப்தி; இந்தியா பதில் என்ன?

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் ஜூன் 12-ம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, வ... மேலும் பார்க்க