செய்திகள் :

சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்!

post image

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சினின் 15 ஆண்டுகால சாதனையை சூர்யகுமார் யாதவ் முறியடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இருப்பினும் மும்பை சார்பில் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி அந்த அணியின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்து மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.

சூர்யகுமார் யாதவ் இந்த சீசனில் 14 போட்டிகளில் 640 ரன்களை கடந்துள்ளார்.

இதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக 618ஆகவே இருந்தது. அந்த சாதனை சச்சின் கைவசம் இருந்தது.

தற்போது, 15 போட்டிகளில் சச்சின் செய்த சாதனையை 14 போட்டிகளிலேயே சூர்யகுமார் முறியடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணி டாப் 2-க்குள் செல்ல முடியாததால் எலிமினேட்டரில் மட்டுமே விளையாட முடியும்.

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றதால் இந்தத் தோல்வி பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதென அதன் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

நேரடி இறுதி ஆட்ட வாய்ப்பு: பஞ்சாப் - பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்கும். தோற்கும் அ... மேலும் பார்க்க

திக்வேஷ் ரதியை அவமதித்த ரிஷப் பந்த்: அஸ்வின்

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை கடுமையாக விமர்சித்து அஸ்வின் பேசியுள்ளார். நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் லக்னௌ வீரர் ரன் அவுட் செய்தார். இதனை லக்... மேலும் பார்க்க

முல்லான்பூரில் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் போட்டிகள்..! பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள்!

ஐபிஎல் தொடரின் 18-ஆவது சீசனின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே.27) நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்டமாக பிளே-ஆஃப்ஸ் போட்டிகள் (குவாலிஃபயர் 1, எலிமினேட்டர்) பஞ்சாபின் முல்லான்பூரில் நடைபெறவிருக்கின்றன. இந்தியா... மேலும் பார்க்க

ஆர்சிபிக்காக 9,000 ரன்கள்: ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதமடித்து சாதித்த விராட் கோலி!

ஐபிஎல் தொடரில் அதிகமாக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.விராட் கோலி ஐபிஎல் தொடரில் 265 போட்டிகளில் 8,606 ரன்கள் குவித்துள்ளார். இதில் 63 அரைசதங்கள், 8 சதங்களும் அ... மேலும் பார்க்க

எனது குரு தினேஷ் கார்த்திக் அண்ணா... நெகிழ்ச்சியாகப் பேசிய ஜிதேஷ் சர்மா!

ஆட்ட நாயகன் விருது வென்ற ஆர்சிபி வீரர் அந்த அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடி வந்தார். கடந்தாண்ட... மேலும் பார்க்க

வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய ஆர்சிபி..! ஈ சாலா கம் நம்தே நிஜமாகுமா?

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் யாருமே செய்யாத சாதனையை ஆர்சிபி நிகழ்த்தியுள்ளது. 2008-ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு அணிக்கு 7 போட்டிகள் வெளியேவும் 7 போட்டிகள் சொந்த மண்ணிலு... மேலும் பார்க்க