செய்திகள் :

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்தான் வருகிறார்கள். இதனால் எப்பொழுதும் பரபரப்புடன் இருக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலும் கடுமையாக ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக ஆண்டிபட்டியில் புதிய வாரச் சந்தை 2023 ஆம் ஆண்டு 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 16 கட்டடங்கள் கட்டி முடிக்கபட்டது. கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், இந்த இடம் தற்போது மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. வியாபாரிகளோ தெருக்களில் தார்பாய், தகரம் உள்ளிட்டவை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தெருவில் கடை அமைத்திருக்கும் வியாபாரிகள்

எல்லா நேரங்களிலும் மது குடிப்பதற்காக இங்கு பலர் வந்து செல்கின்றனர் இது பற்றி அங்கிருந்த வியாபாரிகளிடம் பேசும் போது, ``நாங்க நாற்பது வருசமா இங்கதா வியாபாரம் செய்கிறோம். இந்த கட்டடம் 2023ல கட்டி முடிக்கப்பட்டு அப்போதே பயன்பாட்டிற்கு வரவேண்டியது. ஆனால் இன்னும் ஏன் உபயோகத்திற்கு வரவில்லை. இதனால் தற்போது தெருக்களில் கடைகளை நடத்தி வருகிறோம். அந்த கட்டடத்தின் அருகில் எப்போது திறக்கப்படும் என்ற போர்டு இருந்தது. தற்போது அந்த போர்டையும் காணவில்லை. மது அருந்துபவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்" என்றனர்.

ஆண்டிபட்டி காய்கறி வாரச் சந்தை கட்டடங்கள்

இது குறித்து ஆண்டிபட்டி கவுன்சிலர் ஆறுமுகத்தை தொடர்புகொள்ள முயற்சித்தபோது, ``வேலை காரணமாக வெளியில் இருக்கிறேன். நாளை நான் உங்களை தொடர்புகொண்டு எப்பொழுது எங்கு சந்திக்கலாம் என்ற விவரத்தை கூறுகிறேன்" என்றார். பின்னர் இரண்டு நாட்கள் ஆகியும் தொடர்பு கொள்ளாததால் மீண்டும் ஒருமுறை முயற்சித்ததில் அழைப்பை துண்டித்துவிட்டார்.

இது குறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்ட போது, "கேண்டின் கட்டும் வேலைகள் இருப்பதால் இன்னமும் திறக்கமால் இருக்கிறோம். கூடிய விரைவில் பணிகள் முடிந்து திறக்கப்படும். தற்போது எல்லா இடங்களிலும் மது குடிக்கத்தான் செய்கிறார்கள். புதிய கட்டடத்தில் மது குடிப்பதை தடுப்பது சிரமம் தான்" என்றார்.

அதிகாரிகளே அலட்சியமாக நடந்து கொண்டால் அந்த புதிய கட்டடங்களில் இன்னும் பல சமூக விரோத செயல்கள் நடக்கும். அரசு இதை கவனிக்குமா?!

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க

"அதிமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்"-எஸ்.பி.வேலுமணி வாக்குறுதி

பணி நிரந்தரம் செய்ய வேண்டியும், மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 11-வது நாளாகத... மேலும் பார்க்க