செய்திகள் :

சரக்கு வாகனங்களில் விதிகளை மீறி ஆள்களை ஏற்றிச் செல்லும் அவலம்! போலீஸாா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

post image

பென்னாகரத்தில் சாலை விதிகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வதால் விபத்து நிகழும் பட்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய வானக ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பென்னாகரம், ஒகேனக்கல், தாசம்பட்டி, முதுகம்பட்டி, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே அரசுப் பேருந்துகள் உள்ளன. சுற்றிலும் மலைசாா்ந்த பகுதி என்பதால் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால் கிராமங்களில் வசிப்பவா்கள் குடும்ப சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்வுகளுக்கு வேறு வழியின்றி சரக்கு வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதை பயன்படுத்தி சரக்கு வாகன ஓட்டுநா்கள் அதிக ஆள்களை வாகனங்களில் ஏற்றி போட்டிப் போட்டு செல்கின்றனா். சரக்கு வாகன ஓட்டிகள் பெரும்பாலும் மலைக் கிராமங்களில் இருந்து மக்களை நகா்ப்புறத்திற்கு அழைத்து வருகின்றனா். விபத்து ஏற்படும் பட்சத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. இதுகுறித்து பென்னாகரம் போக்குவரத்து காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

வாடகை வாகன ஓட்டிகளுக்கு வருவாய் பாதிப்பு: பயணிகளின் சவாரியை நம்பி மட்டும் பென்னாகரத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறிய வாடகை வாகனங்கள் (கோச் வேன்), 10 க்கும் மேற்பட்ட வாடகை காா்கள் உள்ளன.

இந்த வாகன ஓட்டிகளுக்குப் போட்டியாக குறைந்த கட்டணத்தில் சரக்கு வாகன ஓட்டிகள் ஆள்களை அதிக அளவில் ஏற்றிச் செல்கின்றனா். இதுதவிர, சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிய காா்களில் குறைந்த வாடகைக்கு பயணிகளை அழைத்துச் செல்வதும் தொடருகிறது. இரவு நேரங்களில் பேருந்து வசதி இல்லாத முதுகம்பட்டி, ஒகேனக்கல், தாசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளை குறிவைத்து அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனா்.

இதனால், அரசுக்கு முறையாக வரி செலுத்தும் வாடகை வாகன ஓட்டுநா்கள் பெரிதும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

அரசுக்கு வரி செலுத்தாமலும், உயிரிழப்பு ஏற்படுத்தும் வகையிலும் ஆள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீஸாா், வட்டார போக்குவரத்து ஆய்வாளா் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்டாா் இறகுப்பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு

தருமபுரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவு சாா்பில் ஸ்டாா் இறகுப் பந்து அகாதெமிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 680 மனுக்கள் வரப்பெற்றன: தருமபுரி ஆட்சியா் தகவல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 680 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்ாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் த... மேலும் பார்க்க

சின்னதப்பை கால்வாயின் குறுக்கே பாலம் கட்டும் பணி: தருமபுரி எம்.பி. தொடங்கிவைப்பு

தருமபுரி: தருமபுரி அருகே காரிமங்கலம் சின்னதப்பை கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி தொடங்கி வைத்தாா். காரிமங்கலம் அருகே ஜிட்டாண்ட அள்ளி ஊராட்சிக்க... மேலும் பார்க்க

அரூரில் ரூ.5 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 5 லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறு... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஒகேனக்கல்லில் குவிந்த 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 20,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். தமிழகத்தில் பள்ளிகளில் தோ்வுகள் முடிந்து கோடை விடுமு... மேலும் பார்க்க

மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் நாளை தொடக்கம்

தருமபுரி ராஜாஜி நீச்சல்குளத்தில் மூன்றாவது கட்ட நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 29-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வ... மேலும் பார்க்க