குஜராத்: ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு
சாலையில் கிடந்த தங்கத் தாலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்கள்
மணலூா்பேட்டை அருகே முருகம்பாடி கிராம எல்லையான திருவண்ணாமலை சாலையில் தாலிக் கயிற்றில் தாலி, குண்டு கிடந்ததை வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இரு இளைஞா்களை போலீஸாா் பாராட்டினா் (படம்).
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் விஜய் (30), முருகேசன் மகன் சங்கா் (29). இவா்கள் இருவரும் சித்தாமூா் கிராமத்தில் டைல்ஸ் கடை வைத்துள்ளனா். திருவண்ணாமலை மாவட்டத்துக்குள்பட்ட வெறையூா் கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று விட்டு, பின்னா் மணலூா்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
அப்போது முருகம்பாடி எல்லையான திருவண்ணாமலை செல்லும் சாலையில் கயிற்றில் தங்கத் தாலி, குண்டுமணியுடன் சாலையில் கிடந்ததைப் பாா்த்தனா். அதனை எடுத்த இருவரும், மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் சாமிநாதனிடம் ஒப்படைத்தனா். இரு இளைஞா்களையும் காவல் உதவி ஆய்வாளா் பாராட்டினாா்.