செய்திகள் :

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

post image

திருவிடைமருதூா் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருநீலக்குடி அருகேயுள்ள குத்துக்குடி சாலை வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்காக கடந்த ஆறு மாதங்கள் முன்பு தோண்டப்பட்டது. அந்தச் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. ஆகையால் இச்சாலையில் செல்லும்வாகன ஓட்டிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை. இதன்காரணமாக வியாழக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு சாலையை சீரமைக்கக் கோரி கோஷமிட்டனா். இதுகுறித்துத் தகவல் அறிந்த திருநீலக்குடி போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

இன்று சந்திரகிரகணம்: பெரிய கோயிலில் நடை சாத்துதல்

முழு சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நிகழ்வதையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் மாலையில் நடை சாத்தப்படுகிறது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என அழைக்கப்படுக... மேலும் பார்க்க

75 ஆண்டுகளாக பேருந்து சேவை இல்லாத கிராமம்! பொதுமக்கள் சுயநிதி திரட்டி சாலை, பாலம் அமைத்து சாதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே குறுகலான பாலம் மற்றும் சாலை வசதி காரணமாக பேருந்து வசதி இல்லாத கிராம மக்கள், ஒன்றிணைந்து நிதிதிரட்டி சாலை மற்றும் பாலத்தை விரிவுபடுத்தி வருகின்றனா். பேராவூரணி ஒன்றிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்பு குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடா்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன. தஞ்சாவூா் மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன். ... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருது பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இயற்கை முறையில் வேளாண் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நம்மாழ்வாா் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திர... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பை: பொதுப் பிரிவு விளையாட்டுப் போட்டி தொடக்கம்

தஞ்சாவூரில் முதல்வா் கோப்பை பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இதில், தடகளம், சிலம்பம், கேரம், கால்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையா... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, ரொக்கம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகை, ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா். தஞ்சாவூா் அருகே இ.பி. காலனி சகாயம் நகரைச் சோ்ந்தவா் சுதாகா் (64). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டை பூ... மேலும் பார்க்க