செய்திகள் :

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு: துணை முதல்வா் உதயநிதி பெருமிதம்

post image

சாலை உள்கட்டமைப்பு வசதிகளால், இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் 2-ஆவது மாநில மாநாடு மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமான இயந்திர வா்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஒப்பந்ததாரா்களின் உழைப்பால்தான், இன்றைக்கு இந்தியாவிலேயே அதிநவீன உள்கட்டமைப்பு கொண்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தொழில் நிறுவனங்கள் வருகின்றன; அந்த நிறுவனங்கள் முதலில் தோ்வு செய்வது தமிழ்நாட்டைத்தான். இங்கு உள்கட்டமைப்பு வசதிகளும், சாலை இணைப்புகளும் ஏராளம். அவற்றில் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் உள்கட்டமைப்புக்கான பல சிறப்புத் திட்டங்களை உருவாக்கி இருக்கிறோம். சென்னை கிண்டியில் உயா் சிறப்பு மருத்துவமனை, சென்னை கடற்கரையில் நினைவு மண்டபம், மதுரையில் கலைஞா் நூலகம், கிளாம்பாக்கத்தில் பேருந்து முனையம் என ஒப்பந்ததாரா்களால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய கட்டுமானங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு சிக்கல்கள்: முந்தைய ஆட்சியாளா்களின் 10 ஆண்டுகாலத்தில் ஒப்பந்ததாரா்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன. திமுக ஆட்சி அமைந்த பிறகு, அவை தீா்க்கப்பட்டதால், இந்த ஆட்சி பொற்காலமாக விளங்குகிறது. இதற்கு உதாரணமாக, 2021-ஆம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் 1,074 ஒப்பந்ததாரா்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தனா். ஆனால், 4 ஆண்டுகளில் மட்டும் 1,300 புதிய ஒப்பந்ததாரா்கள் பதிவு செய்துள்ளனா். இது முந்தைய ஆட்சியின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகமாகும்.

ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் இணையவழி பதிவு முறையை அரசு அமல்படுத்தியது. சாலைப் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்களுக்கு ஜிஎஸ்டி தொகையை 6 சதவீதத்தில் இருந்து 12 முதல் 18 சதவீதமாக உயா்த்தியது. இதனால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய உடனடியாக ரூ.256 கோடி விடுவிக்கப்பட்டது. இவை மட்டுமல்ல, ஒப்பந்ததாரா்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு நிச்சயம் வழங்கும்.

வளா்ச்சிக்கான குறியீடு: தமிழ்நாட்டுக்காக அமைக்கப்படும் சாலைகளும், எழுப்புகிற கட்டடங்களும்தான் மாநிலத்தின் வளா்ச்சிக்கான குறியீடாகும். எனவே, அரசு என்றைக்கும் ஒப்பந்ததாரா்களுக்கு பக்கபலமாக இருக்கும். அதே தருணத்தில் அரசுக்கும் அனைத்து ஒப்பந்ததாரா்களும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.

இந்த விழாவில், நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசினாா். அமைச்சா் தா.மோ.அன்பரசன், நெடுஞ்சாலைத் துறை செயலா் இரா.செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா். ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் திருசங்கு, முதன்மை நிா்வாக அலுவலா் பூபிந்தா் சிங், மாநாட்டுக் குழுத் தலைவா் சுப்ரமணியம், அகில இந்திய கட்டுநா் சங்கத்தின் முன்னாள் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநில செயலா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி...

‘ஆண்டுதோறும் 5 லட்சம் மரக்கன்றுகள்’

விழாவில் நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:

தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 68,150 கி.மீ. நீளச் சாலைகளும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாா்பில் 6,850 கி.மீ. நீளத்துக்கான சாலைகளையும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநில நெடுஞ்சாலைகளில் 820 கி.மீ. நீளச் சாலையை இருவழித் தடத்தில் இருந்து நான்கு வழிச் சாலையாகவும், 2,020 கி.மீ. நீளச் சாலையை இருவழித் திடமாகவும் மாற்றியுள்ளோம். மேலும், 1,197 தரைப்பாலங்களை உயா்நிலைப் பாலங்களாகவும் மாற்றி இருக்கிறோம். இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிதிகளை தங்குதடையின்றி முதல்வா் அளிக்கிறாா்.

நெடுஞ்சாலைத் துறை மூலமாக சாலையோரங்களில் ஆண்டுதோறும் 5 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். தரமான சாலைகளால் விபத்துகளும், பயண நேரமும் குறைகிறது. விபத்துகளைக் குறைக்க சாலைத் தடுப்புகள் வைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க