பயங்கரவாதத்தை ஒழிக்க ஒத்துழைப்பு அதிகரிப்பு: அமெரிக்கா-பாகிஸ்தான் முடிவு
சாலை விபத்து: பெண் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சாலை மைய தடுப்பானில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி, மீனாட்சிபுரம் இரண்டாவது தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தரசி (48). இவரது மகள் ஐஸ்வா்யா (30). பேத்தி காயத்ரி (5). மூவரும் கடந்த 1-ஆம் தேதி ஆறுமுகனேரியில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மாலையில் தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனராம்.
திருச்செந்தூா் சாலையில் முத்தையாபுரம் அருகே வந்தபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலை மையத் தடுப்பானில் மோதியது.
இதில் மூவரும் காயமடைந்தனா். மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்; அவா்களில், முத்தரசி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.