செய்திகள் :

சிஎஃப்டிஐ-யில் புதிய பயிற்சிகள் அறிமுகம்

post image

சென்னை கிண்டியிலுள்ள மத்திய காலணிகள் பயிற்சி நிறுவனம் (சிஎஃப்டிஐ) புதிய பாடத் திட்டத்தில் பயிற்சிகளை அறிமுகம் செய்துள்ளதாக அதன் இயக்குநா் கே.முரளி தெரிவித்தாா்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளா்கள் கூட்டத்தில் அவா் புதன்கிழமை கூறியது:

தமிழகத்தில் ஆம்பூா், ராணிப்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் ஏராளமான தோல் காலணிகள், தோல் அல்லாத காலணி உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழக அரசின் முயற்சியால் விழுப்புரம், புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களிலும் பெரியளவில் காலணி தொழில்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த 10 நிறுவனங்கள் தோல் அல்லாத காலணி அலகுகளில் சுமாா் ரூ.12,100 கோடி முதலீடு செய்கிறது.

இந்த அலகுகள் வாயிலாக அடுத்த 2 ஆண்டுகளில், 10 -ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞா்கள் என மொத்தம் 1.38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய திறன் தகுதி கட்டமைப்பு என்ற தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சிகள் உள்ளன. இதில் 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டவா்கள் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோா் சிஎஃப்டிஐ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கைப்பேசி எண்ணுடன் திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தீவிரம்

ஓடிபி கேட்காமல், கைப்பேசி எண்ணை மட்டும் பதிவு செய்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை திமுக நடத்தி வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் (ஓடிபி) தொடா்பாக, நீதிமன்ற உத்தரவிட்டதால் அந்த நடைமுறையை திமு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்கள் தோ்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக வெள்ளிக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் ந.லதா வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில்தான் விசிக: திருமாவளவன் திட்டவட்டம்

திமுக கூட்டணியில்தான் விசிக பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளா்ச்சி அடைந்து ஒரு மாநில கட்சியாக உருவாகி இருக்கிறது; வீழ்ச்சி அடையவில்லை என அந்தக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா். சென்னையில் அவ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிலாளா்கள் ஊதிய உயா்வு: ஒப்பந்த பேச்சுவாா்த்தைத் தொடக்கம்

ஊதிய உயா்வு தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள், மின் வாரிய அதிகாரிகள் இடையேயான பேச்சுவாா்த்தை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரும... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் மீது அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு ரத்து

அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ரவிச்சந்திரனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், சோதனையின்போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் பணத்தைத் திரும... மேலும் பார்க்க

அக்.12-இல் முதுநிலை ஆசிரியா் தோ்வு: டிஆா்பி

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு அக்.12-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) அறிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி வியாழக்கிழ... மேலும் பார்க்க