செய்திகள் :

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற டொவினோ தாமஸ்!

post image

நடிகர் டொவினோ தாமஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை வென்றுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படத்திற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டெமில் வழங்கப்படும் தி செப்டிமஸ் விருது உலக அளவிலான மதிப்புமிக்க ஒரு விருதாகக் கருதப்படுகிறது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை டொவினோ தாமஸ் நரி வேட்டை படத்தில் நடித்ததற்காக வென்றுள்ளார்.

narivetta poster
நரிவேட்டை பட போஸ்டர்

டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.

ஏற்கெனவே, டொவினோ தாமஸ் 2018 படத்திற்காகவும் இந்த விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Tovino Thomas has won the Septimus Award for Best Asian Actor.

அரசுப் பேருந்தில் இட்லி கடை! களைகட்டும் புரமோஷன்!

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் புரமோஷன் மும்முரமாகத் தொடங்கியுள்ளது.இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் ஆஃப்லைனில் வேற லெவலில் புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இட்லி கடை படத்தினை ... மேலும் பார்க்க

முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!

மதராஸி படத்தின் வசூல் இரண்டு நாள்களில் ரூ.50 கோடியைத் தாண்டியதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் முதல்நாளில் ரூ.12.8 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 கோடி என பட... மேலும் பார்க்க

நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆஹா கல்யாணம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிறகடி... மேலும் பார்க்க

விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும்: த்ரிஷா

நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடச... மேலும் பார்க்க

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

நடிகர் மம்மூட்டி பகிர்ந்த புதிய பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.மலையாள சினிமாவின் அடையாள... மேலும் பார்க்க

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

நடிகர் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை அவரது தம்பியும் நடிகருமான தனுஷ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார... மேலும் பார்க்க