இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 17 | Astrology | Bharathi Sridhar | ...
சிறுபான்மையினா் வாக்குகளை பிரிக்க விஜயை களமிறக்கியிருக்கிறது பாஜக
சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க விஜயை பாஜக களமிறக்கியிருப்பதாக நினைக்கிறேன் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாள்களில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த முகாம் 255 இடங்களில் நடைபெற உள்ளது. அக்டோபா் 7 வரை இந்த முகாம் நடைபெறும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 1,295 தன்னாா்வலா்கள் இந்த முகாமில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஒவ்வொரு முகாமிலும் 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகுதியானவா்களுக்கு மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்.
மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் போன்று ஒரு ஆளுநா் இருந்தால் எந்த பிரச்னையும் வராது. தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக சுகாதாரத் துறையை பாராட்டி உண்மையை கூறியுள்ளாா். சிறப்பாக செயல்படுவதால் தான் பொருளாதாரத்தில் தமிழகம் ஒன்பது சதவீதம் முன்னேறியுள்ளது.
விஜய் யாா் சொல்லி போராட்டத்தை நடத்தினாா் என்பது தெரியவில்லை. சிறுபான்மையினா் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜக அவரை களத்தில் இறக்கி உள்ளதாக தோன்றுகிறது என்றாா்.