செய்திகள் :

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கோயில் பூசாரிக்கு 20 ஆண்டு சிறை

post image

அருப்புக்கோட்டை அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கோயில் பூசாரிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (67). கோயில் பூசாரியான இவா், கோயிலுக்கு வந்த இரு சிறுமிகளுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளாா். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமிகளை மிரட்டியுள்ளாா்.

இதையடுத்து, சிறுமிகளின் தாய் அளித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மாரியப்பனை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மாரியப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி புஷ்பராணி தீா்ப்பளித்தாா்.

விருதுநகா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை சேகரிப்பு மையம்

விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் பொது மாதிரி பரிசோதனை சேகரிப்பு, தகவல் மையம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் , கலச... மேலும் பார்க்க

ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி

ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள... மேலும் பார்க்க

ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: 2 ஆயிரம் போ் முளைப்பாரி ஊா்வலம்

ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பாரம்பரிய முளைக்கொட்டு திருவிழாவையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். விர... மேலும் பார்க்க

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந... மேலும் பார்க்க

இளைஞா் கொலை: சகோதரா்கள் கைது

சிவகாசி அருகே இளைஞரை அடித்துக்கொலை செய்த அண்ணன், தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் தா்மராஜ் (21). இவா் கடந்த 1... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகாசியில் அரசு அலுவலகங்களில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். சிவகாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு , ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெற்... மேலும் பார்க்க