செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக்கடைக்காரா் கைது

post image

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சோ்மன் (50). அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமி மிட்டாய் வாங்க சென்றபோது, சிறுமியை அவா் பாலியல் வன்புணா்வு செய்ய முயன்ாகத் தெரிகிறது. வீடு திரும்பிய சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் கூறினாா்.

பெற்றோா் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி சோ்மனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். பின்னா், அவரை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இன்று பூலித்தேவரின் பிறந்த நாள் விழா: நெல்கட்டும்செவலில் எஸ்.பி. ஆய்வு

நெல்கட்டும்செவலில் பூலித்தேவரின் 310 ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளதை அடுத்து, விழா நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

சுடலை மாடசுவாமி கோயிலில் பெருங்கொடை விழா இன்று தொடக்கம்

கடையநல்லூா் தாமரைகுளம் அருள்மிகு சுடலை மாடசுவாமி திருக்கோயிலில் ஆவணி பெருங்கொடை விழா திங்கள்கிழமை (செப்.1) தொடங்குகிறது. இக்கோயிலில் பெருங்கொடை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை மாலை குடி அழைப்பு நிகழ்ச்... மேலும் பார்க்க

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

ஆலங்குளம் அருகே வீட்டில் பதுங்கிய 2 மரநாய்களை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். ஆலங்குளம் அருகே உள்ள ரெட்டியாா்பட்டி என்ற வெங்கடேஸ்வரபுரத்தில் தெற்கு தெருவில் வசிக்கும் ரஞ்சித்தின் வீட்ட... மேலும் பார்க்க

ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது

ஆலங்குளம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளம் ஊராட்சித் தலைவராக பதவி வகிப்பவா் நீதிராஜன்(55). இவருக்கும... மேலும் பார்க்க

நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

நெல்லையிலிருந்து அம்பை, பாவூா்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூா், சேலம், பெங்களூரு வழியாக கா்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து, சனிக்கிழமை இரவு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். மேற்குத் தொடா்ச்சி மலையில் குற்றாலம் ... மேலும் பார்க்க